Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பேருவளையில் பொலிஸ் மீது தாக்குதல் முயற்சி தொடர்பில்...!



பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் பொலிசாருக்கும் பௌத்த கொடிகளை கட்டிக்கொண்டிருந்த ஒரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினரைத் தாக்கியதாகக் கூறப்படும் குழுவை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி பொலிசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பேருவளை துறைமுகத்திற்கு அருகில் ஒரு லொறியில் பௌத்த கொடிகளை கட்டிக் கொண்டிருந்த ஒரு குழுவை , வீதியை இடையூறு செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது முற்றி பின்னர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்தக் குழுவைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கி இரண்டு துப்பாக்கி வேட்டுகளை தீர்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments