
பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயமாக்கும் நோக்கின் முன்னோடித் திட்டமாக மெட்ரோ பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய கொழும்பு, மாக்கும்புர (கொட்டாவ), கடுவெல, கடவத்த மற்றும் மொரட்டுவ உள்ளிட்ட பல பிரதான வழிகளில், இச்சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.சுமார் நூறு பஸ்கள் முதற் கட்டமாக இயக்கப்படவுள்ளன.
இதற்காக பட்ஜட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 2007 ஆம் ஆண்டு 07 ஆம் எண் கொண்ட நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் கீழ்,இச்சேவைகள் இடம்பெறும்.
இதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



0 Comments