Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



விமான விபத்தில் ஒருவர் உயிர் தப்பியது தொடர்பில் வெளியான தகவலில்...!



ஏர் இந்தியா விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக குஜராத் காவல்துறை கூறியுள்ளது.



குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் பகல் 1.17 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே மேதானி நகர் குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சரியாக 1.20 மணிக்கு கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்குள்ளாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் இரண்டு விமானிகள், பத்து விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்தனர்.



விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரும் உயிரிந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக அகமதாபாத் மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார். விமானத்தின் 11A இருக்கையில் பயணித்த விஷ்வாஸ் குமார் என்பவர் உயிர் பிழைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஷ்வாஸ் குமார் பிரிட்டன் குடியுரிமை பெற்ற இந்தியராவார். இருப்பினும் விமானம் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Post a Comment

0 Comments