Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு...!



இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் சூழ்நிலை காரணமாக லெபனானில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அனைத்து தனிநபர்களும் நெரிசலான இடங்களுக்குச் செல்வது, இரவில் வெளியே செல்வது, விழாக்களில் பங்கேற்பது மற்றும் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு அதில் அறிவுறுத்தியுள்ளது.

மேலதிகமாக, இலங்கையர்கள் வெளியில் செல்லும்போது தங்கள் லெபனான் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் நகலை தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்று தூதரகம் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இஸ்ரேலும் ஈரானும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன.

ஐந்து நாட்களில் 224 பேர் இறந்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள்.

அதே நேரத்தில் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

ஈரானிய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் காரணமாக கிட்டத்தட்ட 3,000 இஸ்ரேலியர்கள் வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறினார்.

Post a Comment

0 Comments