Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Update: விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்...!



விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.



குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் பகல் 1.17 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே மேதானி நகர் குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சரியாக 1.20 மணிக்கு கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்குள்ளாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் இரண்டு விமானிகள், பத்து விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்தனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.




இந்நிலையில் அகமதாபாத் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. 

மேலும் காயமடைந்தோரின் மருத்துவ செலவுகளை ஏற்பதாகவும், சேதமான மருத்துவக் கல்லூரி விடுதி கட்டித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து கவலை அடைந்தோம் என்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments