Trending

6/recent/ticker-posts

Live Radio

பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிக்க தீர்மானம் பற்றி...!



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு அப்துல் வாஸித்தை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்காக போட்டியிடுவதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் கடந்த மார்ச் 14 ஆம் திகதி தமது பதவிலிருந்து விலகியிருந்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டது.

இந்த நிலையில், குறித்த வெற்றிடத்துக்கே, பொத்துவில் நகர சபையின் முன்னாள் தலைவரான அப்துல் வாஸித்தை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments