Trending

6/recent/ticker-posts

Live Radio

Breaking News: கொழும்பு மாநகர மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு...!



கொழும்பு மாநகர மேயராக வ்ராய் கெலி பல்தசார் இரகசிய வாக்கெடுப்பில் 61 வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார்.

பிரதி மேயராக தேசிய மக்கள் சக்தியின் ஹேமந்த குமார தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு மேல்மாகாண உள்ளுராட்சி சபை ஆணையாளர் முன்னிலையில் நடத்தப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பாக வ்ராய் கெலி பல்தசார் முன்மொழியப்பட்டதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக முகமது ரிசா சாருக் முன்மொழியப்பட்டார்.

எதிர்ப்புக்கு மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.இதில் கெலி பல்தசார் 61 வாக்குகளையும் ரிசா சரூக் 54 வாக்குகளையும் பெற்றனர்.

Post a Comment

0 Comments