
எயார் இந்தியா நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஹமதாபாத் விமான விபத்துக்கு பிறகு எயார் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ரேல் வான்வெளி மூடல் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு 15 சதவிகித சேவைகளை குறைக்க இருப்பதாக எயார் இந்தியா நிறுவனம் நேற்று (19) அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று 8 விமானங்கள் இரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பின்வரும் விமானசேவைகள் இரத்துச் செய்யப்டுகின்றன.
- ஏ.ஐ906 டுபாய் - சென்னை
- ஏ.ஐ308 டெல்லி - மெல்போர்ன்
- ஏ.ஐ309 மெல்போர்ன் - டெல்லி
- ஏ.ஐ2204 டுபாய் - ஐதராபாத்
- ஏ.ஐ874 பூனே - டெல்லி
- ஏ.ஐ456 அஹமதாபாத் - டெல்லி
- ஏ.ஐ2872 ஐதராபாத் - மும்பை
- ஏ.ஐ571 சென்னை – மும்பை
0 Comments