Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஈலோன் மஸ்க், "அமெரிக்கா கட்சி" என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அறிவிவிப்பு...!



செல்வந்த தொழிலதிபர் ஈலோன் மஸ்க், "அமெரிக்கா கட்சி" என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தேசிய அளவில் பரவலான வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய இடங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்சி, 2 அல்லது 3 செனட் இடங்கள் மற்றும் 8 முதல் 10 ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை மாவட்டங்களில் மாத்திரமே கவனம் செலுத்தும் என அவர் கூறினார்.

கட்சியின் நிர்வாகம், வேட்பாளர்கள், நிதி விபரங்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியிடப்படவில்லை எனவும், 2026 ஆம் ஆண்டு தேர்தல்களை இலக்குவைத்து இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments