Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பாலஸ்தீன அரசை கனடா அங்கீகரித்தால் அந்த நாட்டுடனான வர்த்தக உடன்பாட்டிற்கு பாதிப்பு - டிரம்ப்...!



பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடாவின் திட்டம் அந்த நாட்டுடனான வர்த்தக உடன்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கனடா பாலஸ்தீனதேசத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் இது அவர்களுடன் நாங்கள் வர்த்தக உடன்பாட்டிற்கு வருவதை கடினமாக்கும் ஓ கனடா என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கனடாவின் தீர்மானத்தை இஸ்ரேலும் கண்டித்துள்ளது.

கனடாவின் இந்த செயற்பாடு ஹமாசிற்கான வெகுமானம் என தெரிவித்துள்ள இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு இது காசாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யும் முயற்சிகளிற்கு பாதிப்பை என குறிப்பிட்டுள்ளது.

கனடாவின் இந்த தீர்மானம் ஹமாஸ் தனது நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்குவதற்கு உதவும் என பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments