நாட்டின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள கிளர்ச்சிகள் மீண்டும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, தற்போதைய அரசாங்கத்துக்கு உள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிறுவனங்கள் திருத்த சட்டம் மூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதியமைச்சர்;
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க காலத்தில் 1983 ஆம் ஆண்டு தமது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்காக இனவாத கிளர்ச்சி ஏற்பட்டது. அதற்கு முன்னரே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வாய்ப்புகள் இருந்தபோதும் அது இடம்பெறவில்லை. எவ்வாறெனினும் இதுபோன்ற கிளர்ச்சிகள் மீண்டும் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்திற்குள்ளது.

திருகோணமலையில் இடம்பெறும் காணி பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் விடயங்களை முன் வைத்துள்ளார். நாம் அதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்.எனினும், இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் நேர்மையான செயற்பாடுகளை உறுதிப்படுத்தும் ஒன்றாக அமைகிறது. கடந்த காலங்களில் பல்வேறு போலி நிறுவனங்கள் கேள்விக் கோரலுக்காக உட்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையிலும் அவ்வாறான விடயங்கள் காணப்படுகின்றன. இதுபோன்ற மேலும் திருத்தங்களை நாம் முன்வைக்க நடவடிக்கை எடுப்போம்.இதுபோன்ற திருத்தங்களை கடந்த காலங்களில் கொண்டு வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த அரசாங்கம் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளது.எனினும் அவர்களுக்கு இது போன்ற சட்டங்களை நிறைவேற்ற முடியாமலானது.

0 Comments