Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை? முழு விபரம்...!



வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்தில் வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு, இலகுவான முறையில் விமான நிலையத்திலேயே குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த புதிய சேவை ஒகஸ்ட் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் , இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் ஒன்று அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, இந்த அனுமதி பத்திரத்திற்காக வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை காரணமாக ஏற்படும் சிரமம் குறித்து எதிர்மறையான கருத்துகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments