தற்போது நிலவி வரும் மழைக்கால வானிலையுடன் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர கருத்து தெரிவிக்கையில்; இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதே காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும், கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கவும் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்ச்சியான மழை காரணமாக நீர் தேங்கி நிற்கும் இடங்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

0 Comments