
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் பதவியிலிருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் பதவியிலிருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் துறையில் ஆரம்ப கிரிகோரி மற்றும் அனியா காஃபி பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றுவதற்கே அவர்,அங்கு செல்லவுள்ளார்.
இதுபற்றி சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் இணைந்தார்.
ஜனவரி 2022 ஆம் ஆண்டு முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
இலங்கைக்கு அண்மையில் கீதா கோபிநாத் விஜயம் செய்திருந்த பின்னணியில் அவரது பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரின் இந்த திடீர் தீர்மானம் சொந்த முடிவாகக் கருதப்படுகின்றது.



0 Comments