Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Update: வருடாந்திர பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்...!



வருடாந்திர பேருந்து கட்டண திருத்தம் இன்று (04) முதல் அமலுக்கு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணம் 0.55 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜெயவர்தன குறிப்பிட்டார்.

புதிய கட்டண திருத்தத்தின் கீழ், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.27, இரண்டாவது கட்டணம் ரூ.35, மூன்றாவது பேருந்து கட்டணம் ரூ.45 ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.

இருப்பினும், நான்காவது பேருந்து கட்டணக் காலத்திலிருந்து அவை திருத்தப்படும்.

அதன்படி, ரூ.56, ரூ.77, ரூ.87, ரூ.117, ரூ.136 மற்றும் ரூ.141 உள்ளிட்ட பல கட்டணங்கள் ஒரு ரூபாய் குறைக்கப்படும்.

Post a Comment

0 Comments