Trending

6/recent/ticker-posts

Live Radio

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் அவசர அறிவிப்பு...!



ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சில ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட ஏனைய நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் ஒன்றிணைவார்கள் என்று சில ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தகைய எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments