Trending

6/recent/ticker-posts

Live Radio

நாட்டின் நிதிச் சந்தையில் வளர்ச்சி...!



2025 ஆம் ஆண்டில் இதுவரை உள்நாட்டு நிதிச் சந்தை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜூன் 2025 சந்தை செயல்பாட்டு அறிக்கையின் மூலம் மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு நிதிச் சந்தையில் புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு மற்றும் பிற சொத்துக்களை பணமாக மாற்றும் திறன் ஆகியவை உயர் மட்டத்தில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நிதிச் சந்தையில் வளர்ச்சியுடன், சந்தை நடவடிக்கைகள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான சந்தை ஆகியவை மீண்டு வருவதாகவும் சந்தை செயல்பாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments