Trending

6/recent/ticker-posts

வவுனியாவில் நித்திரை கொண்டவர் மீது டிப்பர் ஏறியதில் இளைஞன் மரணம்...!



வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் ஒழுங்கையில் உறங்கியவர் மீது டிப்பர் வாகனம் ஏறிச் சென்றதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக நெடுங்கேணி பொலிஸார் இன்று (02) தெரிவித்தனர்.

நேற்று இரவு (0.08) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டு ஒழுங்கையில் படுத்து உறங்கிய இளைஞனை கவனிக்காத நிலையில் டிப்பர் வாகனத்தைச் செலுத்தி வந்த குறித்த இளைஞனின் மைத்துனர் வீடொன்றில் சல்லிக் கல்லினை இறக்கிவிட்டு வாகனத்தை திருப்பியுள்ளார்.

இரவு நேரமாகையால் குறித்த ஒழுங்கையில் இளைஞன் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில் வாகனம் ஒழுங்கையில் படுத்திருந்த இளைஞன் மீது ஏறியுள்ளது. இன்று காலையிலேயே குறித்த இளைஞன் டிப்பர் வாகனம் ஏறியதில் மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் வாகனத்தில் நசுங்கிய நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதை அறிந்த மைத்துனரான வாகனச்சாரதி நெடுங்கேணிப் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments