
அறுகம் குடா பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறி வெள்ளிக்கிழமை (29) பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தம்பதியினர் தங்கள் வாகனத்தில் பயணித்தபோது, 26 வயதுடைய இரண்டு வெளிநாட்டினர் வீதியை மறித்துள்ளனர். இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்ட பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.
பாதிக்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சந்தேக நபர்கள் சனிக்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ரூ. ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களின் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார், மேலும் வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இலங்கையில் பிரபலமான கடற்கரையான அறுகம் குடா, அண்மையில் சில இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் நடத்தை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்தப் பகுதி கடலலை சறுக்கல் செய்வதற்கும் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கும் பெயர் பெற்ற இடமாகும்.



0 Comments