Trending

6/recent/ticker-posts

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 15 பேர் அதிரடியாக கைது...!



கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை செய்த 6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் 24 முதல் 26 வயதுக்குட்பட்ட மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகள் குழுவை இந்த மாணவர்கள் பகிடிவதை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகிடிவதை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 16 பேரையும் இன்று ஏறாவூர் நீதவான் நீதிமன்ற, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது ஒவ்வொரு மாணவர்களையும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து, எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்

Post a Comment

0 Comments