
பாடசாலைப் பாடத்திட்டத்தில் ஆலோசனை மற்றும் உளவியல் பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும், இதற்காக ஆசிரியர்களை நியமிக்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்கக்கூடிய உளவியல் ஆலோசனை குறித்த தேசியக் கொள்கையை உருவாக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கும் கலந்துரையாடலில் பங்கேற்று உரயைாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



0 Comments