
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள வஜிரா மருத்துவமனைக்கு முன்னால் உள்ள வீதியில் புதன்கிழமை ( 24 ) காலை, 50 மீட்டர் ஆழம்கொண்ட ஒரு பெரிய திடீரென ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் தொடர்ந்து விரிவடைந்து, தற்போது சாம்சென் காவல் நிலையத்தின் முன்புறம் வரையிலும் பரவி வருகிறது.
இந்த பள்ளத்தின் ஆழம் 50 மீட்டருக்கும் அதிகமாக உள்ளதால், இது ஒரு பெரும் விபத்துக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து காரணமாக, துசித் மாவட்ட அலுவலகம், வஜிரா மருத்துவமனை - சாங் ஹி (Vajira Hospital-Sang Hi) சந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.
இந்த திடீர் பள்ளம் உருவானதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.



0 Comments