
டென்மார்க்கின் நோர்டிக் மாகாணத்திலுள்ள கோபன்ஹேகன் விமான நிலையத்தின் மீதும் நோர்வேயின் ஒஸ்லோ விமான நிலையம் அருகிலும் நேற்று முன்தினம் (22) சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆளில்லா சிறிய விமானங்கள் பறந்ததையடுத்து இரு விமான நிலையங்களும் மூடப்பட்டன.
கோபன்ஹேகனுக்குச் செல்லும் 35 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. ஒஸ்லோ விமான நிலையத்திலும் 50 விமானங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதனால் ஏராளமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
ஐரோப்பிய விமான நிலையங்கள், சமீபத்தில் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டன.
விமான நிலையங்களின் வருகை, புறப்பாட்டை கண்காணிக்கும் செயன்முறைக்குள், சைபர் குற்றவாளிகள் நுழைந்து அதை செயலிழக்க வைத்தனர். இந்த சூழ்நிலையில் ட்ரோன்கள் பறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு சொந்தமானவையா என்று கேட்டபோது, அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது என்று கோபன்ஹேகன் பொலிஸார் தெரிவித்தனர்.
ட்ரோன்கள் உடனடியாக மாயமானதாகவும், அவற்றில் எதையும் கைப்பற்றவில்லை என்றும் அவர்கள் கூறினர். அவை என்ன வகையான ட்ரோன்கள் என்பதைக் கண்டறிய டென்மார்க், நோர்வே பொலிஸார் இணைந்து தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.



0 Comments