
இலங்கைப் பல்கலைக்கழகங்களை உலக தரப்படுத்தல் அளவுகோல்களுக்கு உயர்த்துதல் மற்றும் சர்வதேச மயப்படுத்துவதற்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் நமது நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் கீழ்க்காணும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
களளிப் பல்கலைக்கழகம் மற்றும் பெலாருஸ் குடியரசின் Polcssky State University இற்கும் இடையில் 05 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
களனிப் பல்கலைக்கழகம் மற்றும் ரஸ்யாவின் Vladimir State University இற்கும் இடையில் 03 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞானபீடத்தின் பன்ம அறிவியல் துறை (Department of Polymer Science) மற்றும் தாய்லாந்து அரசின் Petroleum and Petrochemical College, Chmalongkorn University இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்



0 Comments