
டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் இன்று (29) பிற்பகல் நடைபெற்ற ஜப்பானிய நிதியமைச்சர் கதோ கசுனொபுவுடனான (KATO Katsunobu) இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி கலந்துகொண்டார் .
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், ஜப்பானிய உதவி/JICA ஒத்துழைப்பின் கீழ் இலங்கையில் தற்போது செயல்படுத்தப்படும் மற்றும் செயல்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.



0 Comments