Trending

6/recent/ticker-posts

Live Radio

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம் தொடர்பில்...!



தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலானிகம மற்றும் கஹதுடுவ இடையே இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (16) அதிகாலை காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன் பின்னால் வந்த வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும், மூன்று சிறுவரகள் களுபோவில வைத்திசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments