Trending

6/recent/ticker-posts

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட SSP சதீஸ் கமகேவின் விளக்கமறியல் நீடிப்பு...!



இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

போதைப்பொருள் வர்த்தகர்கள், குற்றக்குழு உறுப்பினர்கள் மற்றும் சேவைகளைப் பெற பொலிஸ் நிலையத்துக்கு வருபவர்களிடமிருந்து ஒரு கோடியே 40 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை இலஞ்சமாக பெற்றமை தொடர்பாக சதீஷ் கமகே கைது செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments