
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 13 ஆம் திகதி பீஜிங்கில் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் தலைவர் வாங் ஹுனிங்கை (Wang Huning) சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இலங்கை-சீன நட்புறவை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம், முதலீடு, கல்வி, சுற்றுலா, கலாசாரம் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.



0 Comments