Trending

6/recent/ticker-posts

Live Radio

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.

 இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் விளம்பரங்கள் முற்றிலும் போலியானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, வேலை தேடுபவர்களிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் மோசடியாக வெளியிடப்படும் இந்த விளம்பரங்களுக்கு மக்கள் ஏமாறக்கூடாது என்று பணியகம் வலியுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Recruitment Scam For Jobs In Israel

மேலும், இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் மட்டுமே கிடைக்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தவறான விளம்பரங்களை இடுகையிடும் அத்தகைய நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணியகம் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments