Trending

6/recent/ticker-posts

Live Radio

ஐ.நா.மனித உரிமை யோசனைக்கு இலங்கை எதிர்ப்பு...!



ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யோசனையை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 30 நாடுகளின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய காலத்திற்குள் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான தீர்க்கமான நடவடிக்கைகள் பலவற்றை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டின் நிலைமை தொடர்பில் நேரில் கண்டறிந்திருந்தார்.

இலங்கை தொடர்பில் அவர் மனித உரிமை பேரவையில் முன்வைத்த அறிக்கையில் இலங்கை பரிணாமம்மிக்க மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு வரலாற்று முக்கியத்தும்வாய்ந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments