Trending

6/recent/ticker-posts

Live Radio

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து...!



வென்னப்புவ புதிய வீதியில் கொரககாஸ் சந்தி பகுதியில் இன்று (17) காலை 6.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த இளம் பெண் மற்றும் வேனின் சாரதி காயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கொஸ்வத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம சேவகர் என தெரியவந்துள்ளது.

இறந்தவரின் மகளே காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்திற்குள்ளான வேனை வென்னப்புவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments