Trending

6/recent/ticker-posts

Live Radio

விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கை தொடர்பில் 1,197 பேர் கைது...!



நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1,197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது நாடளாவிய ரீதியில் 1205 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 429 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 597 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 38 கிலோ 568 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 9771 கஞ்சா செடிகளும், 04 கிராம் குஷ் போதைப்பொருளும், 38 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 249 போதை மாத்திரைகளும் , 416 மதன மோதக மாத்திரைகளும் , 01 கிலோ 58 கிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 11 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments