Trending

6/recent/ticker-posts

Live Radio

28ஆவது ஆசிய பசுபிக் சமூக மாநாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்...!



நாட்டில் 28 ஆவது ஒருங்கிணைந்த ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சமூக மாநாட்டை நடாத்துவதற்குத் தேவையான நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்காக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் இலங்கை சமூகப் பணிகளில் ஈடுபடுகின்ற தொழில்வாண்மையாளர்களின் சங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர்) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2025 நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரைக்கும் 28 ஆவது ஒருங்கிணைந்த ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சமூக மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், குறித்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக 13 உள்நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் 30 நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் 104 பேர் பங்குபற்றுவதற்கு உள்ளனர்.

அதற்கமைய, குறித்த மாநாட்டை எமது நாட்டில் நடாத்துவதற்கும், குறித்த மாநாட்டை நடாத்துவதற்குத் தேவையான நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்காக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் இலங்கை சமூகப் பணிகளில் ஈடுபடுகின்ற தொழில்வாண்மையாளர்களின் சங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments