Trending

6/recent/ticker-posts

Live Radio

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் கட்டணமில்லா பயணத்திற்கு அனுமதி – வீதி அபிவிருத்தி அதிகாரசபை...!



நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் கட்டணமில்லா பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த நேரத்தில் அவசர இடம்பெயர்வுகள், மீட்புப் பணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை எளிதாக்கும் நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இத்தருணத்தில், மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயங்கள் நிலவும் பகுதிகளில் பயணிக்கும் போது வாகன சாரதிகள் மிகுந்த கவனம் செலுத்துமாறும் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வானிலை நிலைமை சீராகும் வரை இந்த சிறப்பு ஏற்பாடு தொடரும் என்றும் அதிகாரசபை கூறியுள்ளது.

Post a Comment

0 Comments