
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அதன் வரலாற்றில் இதுவரை திரட்டப்பட்ட அதிகபட்ச வரி வருமானத்தை 2025 ஆம் ஆண்டுக்காகச் சேகரித்து சாதனை படைத்துள்ளது.
2025 நவம்பர் 17 ஆம் திகதி வரை திரட்டப்பட்ட மொத்த வரி வருமானம் ரூபாய் 2,002,241 மில்லியன் (ரூபாய் 2,002.241 பில்லியன்) எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் தொகை, 2024 ஆம் ஆண்டின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் ரூபாய் 60,079 மில்லியன் அதிகரிப்பு ஆகும்.
2024 ஆம் ஆண்டு முழுவதுமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் திரட்டிய மொத்த வரி வருமானம் ரூபாய் 1,942,162 மில்லியன் ஆகும்.
2025 நவம்பர் 17 ஆம் திகதி வரை வரி வருமானத்தை ரூபாய் 2,002,241 மில்லியன் வரை அதிகரித்ததன் மூலம், அரசின் நிதி நிலையை வலுவாகப் பேணுவதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பாராட்டத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments