Trending

6/recent/ticker-posts

Live Radio

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களின் கவனத்திற்கு...!



இதன்படி இன்று ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் 2,362 பரீட்சை மத்திய நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பரீட்சைக்கு 246,521 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 94,000 தனியார் பரீட்சார்த்திகள் என மொத்தம் 340,521 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் பரீட்சார்த்திகள், பரீட்சை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மின்னணு கடிகாரங்கள், பிற மின்னணு உபகரணங்கள் மற்றும் கைபேசிகள் ஆகியவற்றைப் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments