Trending

6/recent/ticker-posts

Live Radio

பெருந்தோட்டப் பகுதிகளில் ஆசிரியர் விடுதிகள்...!




இலங்கையில் தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்கீழ், முதற்கட்டமாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான விடுதிகளை (Quarters) அமைக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் மொத்தம் 864 பாடசாலைகள் உள்ளன. இவை நகரப்பகுதிகளில் இருந்து மிகவும் தூரமாகவும், பெருந்தோட்டங்களின் உட்புறமாகவும் அமைந்துள்ளதால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு சென்று வருவது பெரும் சவாலாக உள்ளது.


போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதி இல்லாத காரணத்தினால், இரண்டாம் நிலை வகுப்புகளுக்கு போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை.

ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில், இப்பகுதி மாணவர்களின் க.பொ.த (சாதாரண தர) மற்றும் (உயர் தர) பெறுபேறுகள் குறைவாக இருப்பதற்கு இந்த ஆசிரியர் பற்றாக்குறையே பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலைமை பெரும்பாலும் இளைஞர் தலைமுறையினர் திறனற்ற தொழிலாளர்களாக உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

அதனால், தோட்டப் பாடசாலைகளில் மனிதவளம் மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத் தேவை காணப்படுகின்றது.

அதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments