பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய சவால்களைத் தாண்டி, இலங்கை மீண்டும் சர்வதேச பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளதை புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன்படி 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த 2,333,796 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டு முறியடித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதிலும் 2,053,465 பயணிகளே வந்திருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது.
இந்தநிலையில் ஆண்டின் தொடக்கத்திலேயே அதிகபட்சமாக 252,761 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்து ஒரு பலமான அடித்தளத்தை இட்டுள்ளனர்.
இதனையடுத்து செப்டம்பர் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 30.2 சதவீத மாதாந்த வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
இதுவே இந்த ஆண்டின் அதிகபட்ச மாதாந்த வளர்ச்சி விகிதமாகும். மேலும் டிசம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை உச்சத்தை எட்டியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் 25 நாட்களில் மாத்திரம் 195,394 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதிலும் டிசம்பர் 25 ஆம் திகதி மாத்திரம் 11,111 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
இது 2025 ஆம் ஆண்டில் ஒரே நாளில் பதிவான அதிகப்படியான வருகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments