
கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேசத்தில் உள்ள தேவஹந்தியா கிராமத்தில் இன்று (08) மாலை 5.05 மணியளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 2.2 ஆக பதிவாகியுள்ளது.
மடுல்ல, கலவல, மஹவல, உடபிடவல, தெமண்டிய, பப்புகந்த ஆகிய பிரதேசங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.



0 Comments