Trending

6/recent/ticker-posts

Live Radio

ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளுக்கு 25% வரி விதித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி...!




ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்கள் நிறைவடைகின்ற நிலையில், ட்ரம்ப் இந்த வரி விதிப்பை அறிவித்துள்ளார்.

தெஹ்ரானுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக இந்த வரி விதிப்பு நோக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஈரானுடனான வணிகத்தொடர்பு குறித்து எந்தவித விளக்கமும் இன்றி, வரி விதிப்பு உடனடியாக அமுல்படுத்தப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனா, ஈரானின் மிகப்பெரிய வணிக பங்காளியாக இருக்கின்ற நிலையில், ஈராக், ஐக்கிய அரபு இராஜ்சியம், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்டுள்ளன.

எனினும், இந்த வரி விதிப்பு காரணமாக எந்தெந்த நாடுகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்பது உள்ளிட்ட மேலதிக தகவல்கள் எதனையும் வெள்ளை மாளிகை இதுவரை வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments