Trending

6/recent/ticker-posts

Live Radio

முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு விளக்கமறியல்...!





முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி 11-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான நீதிவான் விசாரணை இன்று கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது சமன் ஏக்கநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலையானார். அதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவரை இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிட்டது.

Post a Comment

0 Comments