Trending

6/recent/ticker-posts

Live Radio

ஆசியாவின் சிறந்த கடற்கரைகள் பட்டியகளில் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை இடம்பிடித்து சாதனை...!



உலகின் முன்னணி சுற்றுலாத் தளமான Tripadvisor வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான 'சுற்றுலாப் பயணிகளின் தெரிவு' பட்டியலில், இலங்கையின் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை கடற்கரைகள் ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளில் இடம்பிடித்துள்ளன.
இந்த 'Best of the Best' விருது Tripadvisor தளத்தில் உள்ள மொத்தப் பட்டியலில் 1 வீதத்துக்கும் குறைவான இடங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

கடந்த 12 மாத காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்ட மிகச்சிறந்த விமர்சனங்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

மிரிஸ்ஸ கடற்கரை ஆசிய அளவில் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள இது, அதன் பொன்னிற மணல் பரப்பு, அமைதியான கடற்பகுதி, 'மிரிஸ்ஸ ரைட்' அலைச்சறுக்கு மற்றும் தேங்காய்க்கன்று குன்றிலிருந்து தெரியும் கண்கவர் சூரிய அஸ்தமனத்திற்குப் பெயர் பெற்றது.

பெந்தோட்டை கடற்கரை ஆசிய அளவில் 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இக்கடற்கரை, ஜெட் ஸ்கீயிங் மற்றும் கைட்சர்ஃபிங் போன்ற நீர் விளையாட்டுக்களுக்கும், மென்மையான மணல் பரப்பிற்கும் பிரபல்யமானது.

ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகள் (2026)

1. பனானா கடற்கரை – புக்கெட், தாய்லாந்து
2. கெலிங்கிங் கடற்கரை – நுசா பெனிடா, இந்தோனேசியா
3. ராதாநகர் கடற்கரை – ஹேவ்லாக் தீவு, இந்தியா
4. பாலோலெம் கடற்கரை – கனகோனா, இந்தியா
5. மிரிஸ்ஸ கடற்கரை – மிரிஸ்ஸ, இலங்கை
6. வைட் பீச் – பனாய் தீவு, பிலிப்பைன்ஸ்
7. பெந்தோட்டை கடற்கரை – பெந்தோட்டை, இலங்கை
8. ரெய்லே கடற்கரை – கிராபி, தாய்லாந்து
9. நுசா துவா கடற்கரை – பாலி, இந்தோனேசியா
10. செனாங் கடற்கரை – லங்காவி, மலேசியா

இந்த சர்வதேச அங்கீகாரம் இலங்கையின் கடற்கரை சுற்றுலாத்துறையை உலகளவில் மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments