Trending

6/recent/ticker-posts

Live Radio

"உண்மையான முகம்" தெரிந்தவுடன் விலகிய பார்வையாளர்கள்...!


நேரடி ஒளிபரப்பின் (Livestream) போது அழகு சாதன மென்பொருள் (Beauty filter) தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்ததால், சீனாவைச் சேர்ந்த ஒரு பிரபல இன்ஃப்ளூயன்சர் தனது ஒரு லட்சத்து 40 ஆயிரம் பின்தொடர்பவர்களை உடனடியாக இழந்ததாகக் கூறப்படுகிறது.


எனினும், சமூக வலைத்தளப் பதிவுகளின் அடிப்படையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.


இவ்வளவு அதிகமான பின்தொடர்பவர்கள் குறைந்ததற்கோ அல்லது இந்தச் சம்பவம் உண்மையானது என்பதற்கோ எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இணையத்தில் பரவி வரும் பதிவுகளின்படி, குறித்த பெண் நேரடி ஒளிபரப்பில் இருந்தபோது, திடீரென அவரது முகத்தில் இருந்த பியூட்டி பில்டர் மறைந்தது. அந்த சில நொடிகளில் முதிர்ந்த சருமம் கொண்ட ஒரு பெண்ணின் தோற்றம் வெளிப்பட்டது.


அடுத்த சில விநாடிகளில் மீண்டும் அந்த பில்டர் செயல்படத் தொடங்கியதும், முகம் மென்மையாகவும், சிறியதாகவும் மாறியது.


இந்தச் சில நொடிகள் கொண்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது. அவரது "உண்மையான முகம்" தெரிந்தவுடன் 1,40,000 பேர் அவரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாகக் கூறி இந்த காணொளி பகிரப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments