Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கையில் மின்சார விநியோகத் துறையில் பாரிய மாற்றம்...!


இலங்கையின் மின்சக்தித் துறையை மறுசீரமைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டதிட்டங்களுக்கு அமைய, மின்சார விநியோகப் பணிகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.


2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களுக்கு இணங்க, இலங்கை மின்சார சபை இதுவரையில் முன்னெடுத்து வந்த மின்சார விநியோகப் பணிகளை இலெக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (பிரைவெட்) லிமிடெட் (Electricity Distribution Lanka (Private) Limited - EDL) பொறுப்பேற்றுள்ளது.


வாடிக்கையாளர்களுக்கும் ஏனைய பங்குதாரர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அறிவித்தலில், EDL நிறுவனம் பின்வரும் இலக்குகளை வலியுறுத்தியுள்ளது.


மின் விநியோகத் துறையில் நவீன செயல்பாட்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல்.மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்தல்.பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை உயர்த்துவதோடு, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மின் விநியோகச் சேவையை வழங்குதல்.


இந்த நிர்வாக மாற்றத்தைத் தொடர்ந்து, இதுவரை 'இலங்கை மின்சார சபை' என்ற பெயரில் இயங்கி வந்த அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்கள் அனைத்தும், புதிய நிறுவனமான 'Electricity Distribution Lanka' (EDL) என்ற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments