
ஈரானில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சிக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவாக ஏற்பட்ட அண்மைய நிலைமைகள் தொடர்பில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் மார்ச் 4ஆம் திகதி இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கப்பலான டெனாவின் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மீட்பு பணிகளுக்கு உதவிமைக்கும், கடற்படையினரின் 84 சடலங்களை மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்தமைக்கும் மற்றுமொரு கப்பலில் இருந்த 208 பேருக்கும் அவரச ஒத்துழைப்புக்களை வழங்கமைக்கும் நன்றிகளையும் ஈரான் வெளிவிகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments