
ஹோர்முஸ் நீரிணையை பாவிப்பதற்கு சில நாடுகளுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா,இஸ்ரேல் மற்றும் அதன் நேசநாடுகள் இந்த வழியால் செல்ல அனுமதிக்கப்படாது என அறிவித்துள்ள ஈரான்,ஏனைய நாடுகள் ஹோர்முஸ் நீரிணையை பாவிப்பதில் சிக்கல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மத்தியகிழக்கு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,பல்வேறு ராஜதந்திர மற்றும் இராணுவ யுக்திகளை இரு தரப்புகளும் கையாண்டு வருகின்றன. இதற்கிணங்க ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் யுத்த கேடயமாக பாவித்து வருகிறது.உலக எண்ணெய் மற்றும் சரக்கு விநியோகத்துக்கான 25 வீத கப்பல்கள் இந்த ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே செல்கின்றன.
இக்கடல் பாதையை ஈரான் கட்டுப்படுத்தி நிபந்தனைகள் விதிப்பதால்,பாரிய எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், இதன் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியுள்ளது.இந்த வழித்தடத்தில்தான், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு என்றளவில் நடைபெறுகிறது.
இவ்வாறுள்ள நிலையில்,ஹோர்மூஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரானின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு அமெரிக்கா இயன்றவரை முயற்சித்து வருகிறது.



0 Comments