Trending

6/recent/ticker-posts

Live Radio

உலக சிறுநீரக தினம் இன்று...!



‘பூமியை பாதுகாப்பது போன்று சிறுநீரகங்களை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக சிறுநீரக தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக சிறுநீரக தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தி நோயை தடுத்தல் மற்றும் சிறுநீரகத்தின் சுகாதாரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

உலகம் முழுவதும் 10 பேரில் ஒருவர் நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப கட்டத்தில் எந்தவொரு அறிகுறிகளும் வெளிப்படாது மறைமுகமாக உக்கிரமடையும் இந்த நோய் நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், உடல் பருமன், இருதய நோய் மற்றும் பரம்பரை நோய்கள் உள்ளவர்களுக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.

சாதாரண சிறுநீர் பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனை ஊடாக காலம் தாழ்த்தாது இந்த நோயை அடையாளம் காண முடியுமென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுநீரக நோய் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் வகையிலான பாத யாத்திரையொன்று பொலன்னறுவை தேசிய சிறுநீரக நோய் சிகிச்சை வைத்தியசாலை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments