Trending

6/recent/ticker-posts

Live Radio

போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி மெட்டா நிறுவனம் ஒத்துழைப்பு...!


இலங்கையில் சமூக ஊடகத் தளங்கள் ஊடாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் போலிப் பிரசாரங்களை முறியடிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வெகுஜன ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதில் மெட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளனர்.

இணையவெளியில் மக்கள் சரியான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெறுவதை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்கமைய, போலித் தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்கான தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சாத்தியமான உதவிகளை வழங்க மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டமான “ரட்டம எகட்ட” திட்டத்தின் கீழ் இந்த ஒத்துழைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தச் சந்திப்பில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை ஒருங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுப்பதற்குத் தனது சமூக ஊடகத் தளங்களை (Facebook, Instagram, WhatsApp) பயன்படுத்த மெட்டா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை வரவேற்ற ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நன்மையைக் கருத்திற்கொண்டு மெட்டா நிறுவனத்துடனான இந்த உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments