
கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
பஸ்டியன் மாவத்தை கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர், எம்.ஐ.எம். இக்பால் இது தொடர்பில் கூறுகையில், சந்தையில் நேற்று (15) கோழி இறைச்சி ஒரு கிலோ ரூபா 1,400 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் ஏற்பட்ட சமீபத்திய ஏற்ற, இறக்கங்களைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதிக்கிறது.



0 Comments