
நவீனமயமாக்கப்பட்ட கொழும்பு கோட்டை (புறக்கோட்டை) மத்திய பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ‘Clean Sri Lanka’ தேசிய திட்டத்தின் கீழ், இலங்கை விமானப்படையின் மனிதவள பங்களிப்புடன் இந்த மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டத்தின் கீழ், தற்போதுள்ள கட்டிடங்களை புனரமைத்தல், தகவல் மையம் அமைத்தல், சுகாதார தொகுதி வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் பேருந்துகளுக்கான வெளிப்புற ஒழுங்குபடுத்தல் பகுதிகளை தயாரித்தல் போன்ற அபிவிருத்திப் பணிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நவீனமயமாக்கல் பணிகளின் பின்னர், தரைத்தளம் பேருந்து தரிப்பிடமாகவும், இரண்டாவது தளம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான ஓய்வறையாகவும், மூன்றாவது தளம் நிர்வாக மற்றும் செயல்பாட்டு மத்திய நிலையமாகவும் பயன்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் சிங்கள மற்றும் சித்திரை புத்தாண்டு காலத்திற்கான விசேட போக்குவரத்து சேவைகள் நாளை (09) முதல் இந்த பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்காக சுமார் 1,500 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், ஹட்டன், பதுளை, கண்டி, பண்டாரவளை, அனுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், சிலாபம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல இடங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.



0 Comments